தமிழ்ப்பேழை

இணையத்தில் தமிழை வலுப்படுத்த, வளப்படுத்த, செழுமையாக்க தமிழ்ப்பேழை என்னும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆங்கில விக்சனரியில் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்பதிவுகள் உள்ளன. ஆனால் தமிழ் விக்சனரியில் 3.57 இலட்சத்திற்கான தமிழ் சொற்பதிவுகளே உள்ளன. ஆங்கிலத்தின் அளவிற்கு சொற்பதிவுகளை தமிழில் உருவாக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் இலக்குகளில் ஒன்று. செறிவான வேருடன் திகழும் தமிழின் வேர்ச்சொல் மரபின் அடிப்படையில் உருவாக்கப்பெறும் அகரமுதலிகளை இத்திட்டம் ஒருங்கிணைக்க எண்ணுகிறது.
இத்திட்டத்தால் உருவாக்கப்பெறும் இணைய அகரமுதலிகள் அலைபேசிச்செயலிகளாகவும் வெளியிடப்பெறும்.
தமிழ் விக்சனரி, சில தனி மாந்த உழைப்பினால் தமிழ் இணையத்தில் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டு அரசின் படைப்பாக்கப்பொதும அறிவிப்பால் (GoTN) Tamil Development Departments order on creative commons cc by sa கிடைக்கப்பெறும் அனைத்து அகரமுதலிகளையும் இத்திட்டத்தால் தேடுபொறிக்குகந்தப் பனுவல்களாக மாற்றி வருகின்றோம்.
படைப்பாக்கப்பொதும உரிமத்தின்கீழ் கிடைக்கும் தமிழ் அகரமுதலிகளை இத்திட்டத்தில் தொகுக்க உள்ளோம். இணையத்தில் தமிழ்ச்சொற்களை, அருங்கலைச்சொற்களை இணைக்கவும் செந்தரப்படுத்தவும் எங்களின் பணிகள் தொடரும்.
வாய்ப்பிருப்பின் இப்பணிகளுக்கு உதவுங்கள்!
முனைவர்
தமிழ்ப்பரிதி மாரி
திட்ட முதன்மையர்
தமிழ்ப்பேழை
+91-7299397766
tparithi@gmail.com